காட்டுமன்னார்கோவில் அருகேதிருநங்கையிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது


காட்டுமன்னார்கோவில் அருகேதிருநங்கையிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது
x

காட்டுமன்னார்கோவில் அருகே திருநங்கையிடம் செல்போனை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்


காட்டுமன்னார்கோவில்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் சனா(வயது 26). திருநங்கையான இவர் நேற்று மதியம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென சனா கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த முகமது (20) என்பவர் திருநங்கையிடம் செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து முகமதுவை போலீசார் கைது செய்தனர்.


Next Story