தைப்பூச தேேராட்டத்தையொட்டிதேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற உள்ள தேரோட்டத்திற்காக தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நடைபெற உள்ள தேரோட்டத்திற்காக தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
'ஆண்டவன் உத்தரவு பெட்டி'
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள 'ஆண்டவன் உத்தரவு பெட்டி' விளங்குகிறது.
சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா மலை அடிவராத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் கடந்த மாதம் (ஜனவரி )27-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
5-ந்தேதி தேரோட்டம்
இந்நிலையில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு சாமி மலையை வலம் வரும் திருத்தேரை அலங்கரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
5-ந்தேதி மாலை 4 மணிக்கு அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலைய துறையினர், பக்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். திருத்தேர் 3-ம் நாள் மலையை வலம் வந்து தேர் நிலையை அடைகிறது. தேரோட்டத்திற்காக தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.