திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:-

புஷ்பவனம் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அக்னி வசந்த திருவிழா

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த திருவிழா நடந்தது. இதையொட்டி படுகளம் நிகழ்ச்சி, காவடி ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து பக்தர்கள் நூற்றுக்கணக்கான கத்திகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். அதைத்தொடர்ந்து திரவுபதி அம்மன் தீக்குண்டம் (பூக்குழி) முன்பு எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் உற்சாகம்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திருவிழா கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் திருவிழா நடந்ததால் பக்தர்கள் உற்சாகத்துடன் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு திருநங்கைகள் அம்மன், லெட்சுமி, பார்வதி, காளி, திரவுபதி வேடம் அணிந்து உலா வந்தனர்.

அதேபோல மகாபாரத கதை சொல்லும் நிகழ்ச்சி மற்றும் சாமி வீதி உலால உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் செய்து இருந்தனர். தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story