செம்பட்டி அருகே கருப்புசாமி கோவில் திருவிழா; நள்ளிரவில் கிடாவெட்டி வழிபாடு


செம்பட்டி அருகே கருப்புசாமி கோவில் திருவிழா; நள்ளிரவில் கிடாவெட்டி வழிபாடு
x

செம்பட்டி அருகே கருப்புசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை, கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய திருவிழா, அதிகாலை வரை நடைபெற்றது. முன்னதாக கோவில் வீட்டில் இருந்து சாமி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கருப்புசாமி சலங்கை கட்டி, கையில் சாட்டை மற்றும் அருவாளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.

பின்னர் கோவிலில் நள்ளிரவு 1 மணி அளவில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு நடைபெற்றது. மேலும் கருப்புசாமிக்கு கிடா, மதுபாட்டில்கள், சுருட்டு ஆகியவை படைக்கப்பட்டது. இந்த திருவிழாவில் செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.



Related Tags :
Next Story