விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் பிரசித்திப்பெற்ற வேதாந்தநாயகி உடனாகிய விசுவநாதர் கோவில் உள்ளது. மறுபிறவி போக்கும் தலமான இங்கு பிரதோஷ காலத்தில் சூரியவாசல் திறக்கப்படுவது வழக்கம். இங்கு சனிப் பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. வழக்கத்திற்கு அதிகமாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டில் விசுவநாதர், வேதாந்தநாயகி, நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் விஸ்வநாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் அனைவருக்கும் ருத்ராட்ச பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story