கர்ப்பிணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.
கர்ப்பிணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. அனுப்பி வைத்தார்.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை நேரில் சென்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது மேம்பாலம் அருகே வெம்பக்கோட்டையை சேர்ந்த கலைச்செல்வி என்ற கர்ப்பிணி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனே அந்த பெண்ணை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மீட்டு காரில் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தலைமை மருத்துவரிடம் அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் படி அறிவுறுத்தினாா்.
Related Tags :
Next Story