தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மலைப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் குறுகிய வளைவுகள், கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில், சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சாலையோரம் பள்ளமாக உள்ள பகுதிகளில், தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. குறுகிய வளைவுகளால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர்.நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்தது.

இதனால் சாலை மீண்டும் குறுகலாக மாறி உள்ளது. அந்த இடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே, இடிந்த தடுப்புச்சுவரை போர்க்கால அடிப்படையில் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story