மின்கம்பத்தில் மோதிய பஸ்


மின்கம்பத்தில் மோதிய பஸ்
x

மின்கம்பத்தில் பஸ் மோதியதில் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று குடமுருட்டி வழியாக பெட்டவாய்த்தலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே சென்றபோது, அந்த பஸ் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, உயரழுத்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். இந்த விபத்தில் ஒரு சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் மின்கம்பத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றதால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story