பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு


பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
x

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட பொதுக்குழுக் கூட்டம் நேற்று மாலையில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நடந்தது. கூட்டத்திற்கு மின்கழக தொ.மு.ச. மாவட்ட தலைவர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் மகேஷ், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் களஞ்சி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தகவல் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு மின் ஊழியர்களுக்கு நலஉதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வின் ஒரு அங்கம்தான் தொழிலாளர் முன்னேற்ற சங்கம். உங்களது ஈடுபாடு கட்சியிலும் இருக்க வேண்டும். தொழிற்சங்கமும் கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையுடன் பணியாற்றினால் இந்த இயக்கம் மேலும் வளரும்.

பொது நிறுவனங்களை தனியார்...

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதேபோல் மாநில சுயாட்சியை தடுத்தும், சமூக நீதிக்கு எதிராகவும் செயல்படுகிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை நடத்தி வருகிறார். குமரி மாவட்டம் வளர்ச்சிக்காக நாங்கள் திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்‌.


Next Story