மக்கள்குறைதீர்க்கும் முகாமில் 395 பேர் கலெக்டரிடம் மனு


மக்கள்குறைதீர்க்கும் முகாமில் 395 பேர் கலெக்டரிடம் மனு
x

நாகர்கோவிலில் நடந்த மக்கள்குறைதீர்க்கும் முகாமில் 395 பேர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த மக்கள்குறைதீர்க்கும் முகாமில் 395 பேர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 395 கோரிக்கை மனுக்களை வழங்கினர். அந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story