தஞ்சை தபால்நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருகும் குறுவை நெற்பயிர்கள்
காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு உடனடியாக தமிழகத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.
போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து. உத்திராபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன், சேவையா, விஜயலட்சுமி, ராமச்சந்திரன், பிரபாகர், செல்வகுமார், முகில், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
50 பேர் கைது
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பை நம்பி சாகுபடி செய்த நிலையில், மேட்டூர் அணையில் நீர் இருப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிகிறது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசிடம் உரிய உத்தரவிட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருகும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் தண்ணீரை திறக்க சுப்ரீம்கோர்ட்டும், மத்திய அரசும் தலையிட்டு கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.