ஆவூரில் இன்று நடைபெற இருந்த இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் ஒத்திவைப்பு


ஆவூரில் இன்று நடைபெற இருந்த இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் ஒத்திவைப்பு
x

ஆவூரில் இன்று நடைபெற இருந்த இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், ஆவூரில் நல்ல நிலையில் இருந்த பயணியர் நிழற்குடையை இடித்த இடத்தில் மீண்டும் கட்டித்தர கோரியும், ஆவூர் கல்லறையில் இயங்கி வந்த மின்மோட்டார் கடந்த மே மாதம் பழுதடைந்தது மற்றும் மினி டேங் பழுதடைந்ததை உடனடியாக சரி செய்ய கோரியும், ஆவூர் ஊராட்சியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் கருத்துக்களை கேட்டு அதன்படி தீர்மானங்கள் நிறைவேற்ற கோரியும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் வருவாய் துறை முறையான பதில் தராத மெத்தன போக்கை கண்டித்தும், ஆவூர் ஊராட்சி நிர்வாக முறைகேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆவூரில் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்தை நடத்தினர். இதற்கு விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story