இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர். இவரது மனைவி பெல்சியா (வயது 35). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த பெல்சியாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சுகபிரசவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மருத்துவத் துறையினர் அவரை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தம்பதிக்கு ஆதரவாக செயல்பட்டதாக சமூக ஆர்வலர் சுதாகர் என்பவர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி ஒன்றிய செயலாளர் நீதிசோழன் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவராமன், வீரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சுகாதாரத்துறை, காவல்துறையை கண்டித்து பேசினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story