6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி


6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 15 Sept 2023 2:00 AM IST (Updated: 15 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் இருந்து முல்லையம்பட்டி வழியாக மறவப்பட்டி வரை செல்லும் இணைப்பு சாலையில் சிறுபாலம் சேதமடைந்து இருந்தது. பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் புதிய பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.

பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது வரை பாலம் கட்டுவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே சென்று வருகின்றன. அதிலும் மழை பெய்தால் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லமுடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story