ஒரே நாளில் 25,959 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 25,959 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

ஒரே நாளில் 25,959 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர்

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் 25,959 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story