கொரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை: நம்மை பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கொரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை: நம்மை பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 July 2022 4:15 AM IST (Updated: 12 July 2022 5:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மை பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தாக்கம் மக்களை முடக்கி போட்டுள்ளது. தற்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீள்கின்ற நிலையிலும், கொரோனா அவ்வப்போது வேகமெடுத்து வருகிறது.

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது தீவிரப்படுத்தப்பட்டது. இதனை ஒரு இயக்கமாகவே தமிழக அரசு மேற்கொண்டது.

இதற்கு கைமேல் பலன் கொடுக்கும் வகையில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போடுங்கள்

18 வயதிற்கு மேல் முதல் டோஸ் 95.23 சதவீதம் பேரும், 2-வது டோஸ் 87.25 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கோவிட் 19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மை பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story