ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது


ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது
x

ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது

தஞ்சாவூர்

தஞ்சை அருகே ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. மர்மநபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சை அருகே உள்ள வல்லம் கடைவீதியில் மேலப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் வளாகத்தை சுற்றி 14 கடைகள் உள்ளன. தற்போது வல்லம்- திருச்சி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக வல்லம் பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி வழியாக 2 கி.மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

வல்லம் கடைவீதி பள்ளிவாசல் எதிரே மழைநீர் வடிகால் அமைப்பதற்காக அங்கிருந்த கடைகளில் முன்பகுதி இடிக்கப்பட்டது.

பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள 2 கடைகளில் பேன்சி மற்றும் ஓட்டல் இருந்தது. அந்த கடையில் வாடகைக்கு இருந்த வாடகைதாரர்கள் 2 பேர் கடை சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் அந்த 2 கடைகள் மட்டும் பாதி இடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. அந்த கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் கடைக்கு வெளியே சிறிய கதவுகள் அமைத்து பூட்டு போட்டு வைத்திருந்தனர்.

ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பூட்டப்பட்டு இருந்த ஓட்டல் கடையின் உள்ளே திடீெரன தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்குள்ள டீ கடையை திறக்க வந்த நபர் ஒருவர் ஓட்டல் கடைக்குள் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மர்மநபர்கள் தீவைத்தார்களா?

தகவல் அறிந்ததும் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீவிபத்தில் ஓட்டல் கடைக்குள் இருந்த தண்ணீர் டேங்க், மரம் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்துக்கு காரணம் என்ன? யாராவது மர்மநபர்கள் ஓட்டலுக்கு தீவைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.


Related Tags :
Next Story