பணம் கேட்டு மிரட்டியவர் கைது


பணம் கேட்டு மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் அகஸ்தீசுவரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் செல்வமுருகன் என்ற செல்வம் (வயது 34). இவர் தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு, அந்த பகுதியில் சென்ற ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் செல்வமுருகன் என்ற செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story