கவர்னர் தமிழிசை பயணித்த கோவை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரால் பரபரப்பு !


கவர்னர் தமிழிசை பயணித்த கோவை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரால் பரபரப்பு !
x

புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தந்தார்.

கோவை,

கோவையில் புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த வழியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தந்தார்.

அவர் செல்லும் வழியான கோவை - அவிநாசி சாலையில் சாலையோரம் சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை நடத்தினர்.

தொடர்ந்து காரின் உரிமையாளர் கண்டறியப்பட்டு கார் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story