பூங்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்


பூங்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்
x

பூங்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இங்கு மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை மேலும் ஊராட்சியில் வீட்டு வரியும் திடீரென உயர்த்தியும் வசூலிக்கப்படுகிறது.

இதனை கண்டித்து தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியை புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவரை பணியாளர்கள் முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊரக உறுதி திட்ட பணியாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்குவதில்லை. தவறான முறையில் கணக்கீடு செய்யப்படுகிறது. வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கி கணக்கில் இருப்பு வைப்பதில்லை காலதாமதமாக செய்கின்றனர். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே வேலையை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம்.

வீட்டு வரி, தண்ணீர் வரி கூடுதலாக வசூல் செய்யப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story