முதுமலை-மைசூர் சாலையை மறித்து குறும்பு செய்த கரடி குட்டி...!


முதுமலை-மைசூர் சாலையை மறித்து குறும்பு செய்த கரடி குட்டி...!
x

முதுமலை-மைசூர் செல்லும் சாலையில் கரடி குட்டி ஒன்று படுத்து கிடந்து வாகனங்களை வழி மறித்து உள்ளது.

நீலகிரி


கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் முதுமலைக்கு அடுத்தபடியாக கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. வனப்பகுதி என்பதால் இந்த சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் .

சில சமயங்களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் முதுமலையில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரடிக்குட்டி ஒன்ற சாலையின் நடுவில் உச்சி வானத்தை பார்த்தவாறு மல்லாக்க படுத்தது கொண்டது. இதைக்கண்ட டிரைவர்கள் வாகனத்தை சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்தினர்.

பின்னர், சிறிது நேரம் படுத்துக் கிடந்த கரடி, தொடர்ந்து எழுந்து அங்குமிங்கும் பார்த்தது. பின்னர் சாலையில் நடந்தவாறு இருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் சுற்றுலாப்பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து கரடி குட்டி வனப்பகுதிக்குள் சென்றது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது,

வழக்கமாக காட்டு யானைகள் கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து சென்றுவிடும். ஆனால் கரடிக்குட்டி குறும்பு செய்யும் வகையில் நடுரோட்டில் படுத்துக் கிடந்தது. இக்காட்சியை பார்த்து ரசிப்பதாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story