கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

இலுப்பூர் அருகே ஊனையூரை சேர்ந்தவர் ராமையா (வயது 77). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் படியில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி கிணற்றில் விழுந்ததில் நீரில் மூழ்கி ராமையா பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ராமையாவின் உடலை மீட்டனர்.


Next Story