பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ெரயில்வே மஸ்தூர் யூனியன் உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ெரயில்வே மஸ்தூர் யூனியன் உறுப்பினர்கள் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியார் மயம்

விருதுநகரில் ெரயில்வே மஸ்தூர் யூனியன் மண்டல துணைத்தலைவர் ராஜா ஸ்ரீதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ெரயில்வே ஊழியர்கள் மத்திய அரசின் நடவடிக்கையால் எதிர்நோக்கும் சவால்கள் அதிகம் உள்ளன. மத்திய அரசு ெரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் முனைப்புடன் உள்ளது. இதனால் ெரயில்வே ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ெரயில்வே மஸ்தூர் யூனியன் கடந்த 100 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் மூலம் சம்பள கமிஷன், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற்றுள்ளது. இனியும் ெரயில்வே துறையை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து ெரயில்வே ஊழியர் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

சி.பி.ஐ. விசாரணை

ஒடிசா ெரயில் விபத்து குறித்து ெரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணையை தொடங்கியுள்ளார். மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரதமரும், ெரயில்வே மந்திரியும் இந்த விபத்திற்கு யார் காரணம் என்று தெரியும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. விசாரணைக்கு பின் கமிஷனர் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செயற்குழு கூட்டம்

முன்னதாக கோட்ட செயலாளர் சீதாராமன் தலைமையில் விருதுநகர் மற்றும் சிவகாசி ெரயில்வே மஸ்தூர் யூனியன் உறுப்பினர்களின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தனியார் மயமாக்கலை எதிர்த்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ரவி, பாண்டித்துரை, செந்தில்குமார், ஹரி நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story