ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது
ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது .பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
விருதுநகர்
சாத்தூர்,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென தீப்பற்றியது. உடனே டிரைவர் அகிலன் (வயது 44) பஸ்சை நிறுத்தினார். உடனே பயணிகள் அனைவரும் வேகமாக இறங்கினர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டீசல் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story