பல்கேரியா நாட்டு கைதியை பிடிக்க முடியாமல் 1½ ஆண்டாக போலீசார் திணறல்


பல்கேரியா நாட்டு கைதியை பிடிக்க முடியாமல் 1½ ஆண்டாக போலீசார் திணறல்
x

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய பல்கேரியா நாட்டு கைதியை பிடிக்க முடியாமல் 1½ ஆண்டாக போலீசார் திணறி வருகிறார்கள்.

திருச்சி

திருச்சி, மார்ச்.15-

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய பல்கேரியா நாட்டு கைதியை பிடிக்க முடியாமல் 1½ ஆண்டாக போலீசார் திணறி வருகிறார்கள்.

பல்கேரியா கைதி தப்பி ஓட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, நைஜீரியா, கென்யா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மற்ற கைதிகளை போல் அல்லாமல் சிறப்பு முகாமிற்குள்ளேயே சமைத்து சாப்பிடுவதற்கும், நடமாடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை முகாமை விட்டு வெளியே வர முடியாது.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகர குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த பல்கேரிய நாட்டை சேர்ந்த இலியன் மார்கோவ் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தப்பி சென்றார். சிறப்பு முகாமில் உள்ள அறையின் ஜன்னல் கம்பிகளை அறுத்து அவர் வெளியே குதித்து தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

1½ ஆண்டாக தேடுதல் வேட்டை

இதையடுத்து அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும், அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் தடுக்க அனைத்து விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். தற்போது அவர் குறித்த தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி கே.கே.நகர் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story