இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த அண்ணன்-தம்பி சிக்கினர்

இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த அண்ணன்-தம்பி சிக்கினர்
x

இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் ெகாள்ளையடித்த அண்ணன்-தம்பிைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 360 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் ெகாள்ளையடித்த அண்ணன்-தம்பிைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 360 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் கடையில் கொள்ளை

இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.4½ லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க சணல் குமார் தலைமையில் ஒரு தனிப்படையும், ஜான் போஸ்கோ தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர்.

அண்ணன்-தம்பி சிக்கினர்

இதுதொடர்பாக ேபாலீசார் விசாரணை நடத்தி டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்ததாக கயத்தாறு பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 360 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

Next Story