22 தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் ஓயாது


22 தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை  மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் ஓயாது
x

22 தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் ஓயாது

தஞ்சாவூர்

22 தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் ஓயாது என்று டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.

மொழிப்போர் தியாகிகள் கூட்டம்

பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை எதிரில் தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில தணிக்கை குழு உறுப்பினர் ஏனாதி பாலு, மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் எம். எல். ஏ., மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பட்டுக்கோட்டை என்பது மிகச்சிறந்த அரசியல் நிபுணர்கள், தலைவர்கள், நாடு போற்றும் நல்லவர்கள் வாழ்ந்த பகுதி. இந்த இடத்தில் நான் வந்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மொழிப்போர் என்று அண்ணா, கலைஞர் பெயர் வைத்தனர்.

போராட்டம் ஓயாது

22 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும். அப்போதுதான் நமது போராட்டம் ஓயும். அதுவரைக்கும் போராட்டம் தான் நடக்கும். என்றைக்கு நம் மீது இந்தி மொழி பாயும். பாய்கின்ற நேரத்திலே அது புறமுதுகிட்டு ஓடச்செய்வது உங்கள் கடமை. 22 தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாகும் வரை மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் ஓயாது. தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழகப்பேச்சாளர் வண்ணை அரங்கநாதன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுப.சேகர், ஆர்.பி.ரமேஷ், மைக்கேலம்மாள், எஸ்.எச்.அஸ்ஸலாம், ஒன்றிய நகர செயலாளர்கள் மு.கி. முத்துமாணிக்கம், வீ. கோவிந்தராசு, ஆர். இளங்கோ, ராம. குணசேகரன், என்.பி. பார்த்திபன், பா. ராமநாதன், கா.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், சோமகண்ணப்பன், ஆர்.பி. முருகானந்தம், கோ.இளங்கோவன், எஸ்.சத்ய விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் பொன் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story