கொடைரோடு அருகே மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி


கொடைரோடு அருகே மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி
x

கொடைரோடு அருகே மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியானார்.

திண்டுக்கல்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, ஓரத்தூரை சேர்ந்த சுரேஷ் மகன் மணியரசன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறையொட்டி கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டியில் தெற்கு தெருவில் உள்ள தனது பெரியப்பா தங்கவேல் வீட்டுக்கு மணியரசன் வந்தான். அவருடன் தாய் சுகந்தி மற்றும் 2 அக்காவும் வந்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று அந்த தெருவில் மணியரசன் விளையாட சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த இரும்பு கம்பியில் இருந்த மின்சார கம்பத்தை மணியரசன் பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் மின்சாரம் பாய்ந்து அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த அவனுடைய பெரியப்பா மகள் தேன்மொழி பதறியடித்து கொண்டு ஓடி சென்று, மணியரசனை தூக்க முயன்றார். அவர் மீது மின்சாரம் லேசாக பாய்ந்தது. உடனே அவர் அங்கு இருந்து விலகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த மணியரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story