உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை குறிப்பிட்ட நாட்களில் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இருக்கன்குடி கோவில் உண்டியல்கள் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது ரூ.86 லட்சத்து 37 ஆயிரத்து 70-ம், 225 கிராம் தங்க நகைகளும், 1,330 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர், உதவி ஆணையர், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள், ராஜபாளையம் சரக ஆய்வாளர், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story