ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வில் வெற்றி பெற்றவாலிபர், வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் போராட்டம்

ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வில் வெற்றி பெற்றவாலிபர், வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் போராட்டம்
x

ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வில் வெற்றி பெற்றவாலிபர், வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வில் வெற்றி பெற்றவாலிபர், வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினார்.

கருங்கல் அருகே பூட்டேற்றி கண்ணத்தன்குழி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, விசாரணை நடத்தினர்.

அப்போது ரமேஷ் கடந்த 2018-19-ம் ஆண்டில் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் அந்த பணியை அதிகாரிகள் சதி செய்து வேறு நபருக்கு ரூ.5 லட்சத்திற்கு கொடுத்து விட்டதாகவும், இதனால் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக புகார் மனு ஒன்றை தபால் மூலம் சென்னை தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே போலீசார் தொடர்ந்து ரமேசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் ஏற்கனவே வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story