திட்டக்குடி அருகே ஏரியில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்


திட்டக்குடி அருகே ஏரியில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே ஏரியில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே கோடங்குடியில் உள்ள ஏரியில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும், கரைகளை உயர்த்தி மதகுகளை சீரமைக்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், சிவன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், கோடங்குடி முதல் கோழியூர் வரை தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story