கிள்ளை பகுதியில் மழை: சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு


கிள்ளை பகுதியில் மழை:    சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளை பகுதியில் பெய்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்


பரங்கிப்பேட்டை,

கிள்ளை அருகே உள்ள நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் குமரவேலு. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவரது மனைவி கலியம்மாள் (வயது 60). கூரை வீட்டில் வசித்து வந்தார்.

தற்போது இடைவிடாமல் பெய்து வந்த கனமழை காரணமாக, இவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், இடிபாட்டிற்குள் சிக்கிய கலியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து அறிந்த கிள்ளை போலீஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கலியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலியம்மாளின் மகன் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story