மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x

மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மனைவி பழனியம்மாள்(வயது 60) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story