பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது


பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 6:46 PM GMT)

மேல்பட்டாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது போலீசார் விசாரணை

கடலூர்

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் அருகே உள்ள அண்ணாகிராமம் வடக்கு பாளையத்தை சேர்ந்தவர் கோபிநாதன். இவரது மனைவி சுபாஷினி(வயது 23). இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் சுபாஷினி 2-வதாக மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினியை பிரசவத்துக்காக அவரது உறவினர்கள் நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சுபாஷினிக்கு அங்கிருந்த நர்சு பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் சுபாஷினியை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story