ரூ.7.75 லட்சத்தில் கலையரங்கம்


ரூ.7.75 லட்சத்தில் கலையரங்கம்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே நாரணமங்கலத்தில் ரூ.7.75 லட்சத்தில் கலையரங்கம் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நாரணமங்கலம் ஊராட்சியில் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.75 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில், துணைத்தலைவர் தென்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் வளர்மதிசண்முகம் வரவேற்றார். ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் காவிரி டெல்டா பகுதிகளில் தற்போது பெய்த மழையால் பருத்தி, எள் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என கூறியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலை கூட இந்த அரசு எடுக்கவில்லை. எனவே தி.மு.க. அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன் ஊராட்சி தலைவர் 52புதுக்குடி கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story