தீரன் சின்னமலை நினைவு நாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் அஞ்சலி


தீரன் சின்னமலை நினைவு நாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் அஞ்சலி
x

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலை மற்றும் அதற்கு கீழே உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி

தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும், அதனைத்தொடர்ந்து உருவப்படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வரகூர் அருணாசலம், இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் காளிதாஸ், பொதுச்செயலாளர் சி.ராஜா, செயலாளர் சுமதி வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள், பா.ம.க. சார்பில் தேர்தல் பிரிவு தலைவர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

டி.டி.வி.தினகரன், சீமான்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், மாவட்ட செயலாளர்கள் எல்.ராஜேந்திரன், விதுபாலன், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட தலைவர் முத்தழகன் உள்பட நிர்வாகிகள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராவணன், அன்பு தென்னரசு, ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு அமைப்பினர்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் ஆர்.தேவராஜன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் இசைபாலு, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் தீரன் சின்னமலை உருவப்படம் - சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story