கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
அரூரில் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
தர்மபுரி
அரூர்:
அரூர் பேரூராட்சி ராயப்பன்கொட்டாய் பகுதியில் தீர்த்தமலை சாலையில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அரூர் போலீஸ் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கோவில்களில் உண்டியல் உடைப்பு கோவில் கதவு உடைத்து சாமி நகைகள் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story