டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள்-கேமரா திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள்-கேமரா திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள், கேமராவை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள், கேமராவை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செல்போன்கள் திருட்டு

கோபி அடுத்த காசிபாளையம் மணியக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 28), இவர் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் காசிபாளையம் லட்சுமணன் வீதியை சேர்ந்த முருகேசன் (27) என்பவர் வேலை பார்க்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8½ மணிக்கு மேல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை 10½ மணியளவில் முருகேசன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, 5 செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்து கடையின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப்பை திருடியது தெரிந்தது.

ஸ்டூடியோவில் கைவரிசை

இதேபோல் டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோடு அன்பு நகரை சேர்ந்தவர் சதீஷ் (46), இவர் டி.என்.பாளையம் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் சதீஷ் தனது ஸ்டூடியோவை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

நேற்று காலை ஸ்டூடியோவை திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ெசன்று பார்த்தபோது ஒரு கேமரா, ஒரு கணினி ஆகியவற்றை காணவில்லை.

யாரோ மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து கேமராவையும், கணினியையும் திருடி சென்றது தெரியவந் தது.

அச்சம்

இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதியில் மர்ம நபர்கள் பூட்டப்பட்டுள்ள கடைகளை நோட்டமிட்டு நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனால் கடை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள். எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.


Next Story