கடையில் வைத்திருந்த உண்டியல் திருட்டு
கடையில் வைத்திருந்த உண்டியல் திருட்டு போனது.
புதுக்கோட்டை
ஆலங்குடியில் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக நகரில் ஆங்காங்கே கடைகளில் உண்டியல் வைத்து பொதுமக்களிடம் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகரின் சில கடைகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திருட்டு போவதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஒரு டைல்ஸ் கடையில் வைத்திருந்த உண்டியலை மர்மநபர்கள் திருடி சென்றனர். ஆலங்குடி நகரில் சிவன்கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக ஆங்காங்கே பொதுமக்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்ட உண்டியல்கள் திருட்டு போவதாக கூறி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ராம் கணேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story