மயிலம் அருகேபூ வியாபாரி வீட்டில் பணம் திருட்டு


மயிலம் அருகேபூ வியாபாரி வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:15:48+05:30)

மயிலம் அருகே பூ வியாபாரி வீட்டில் பணம் திருடு போனது.

விழுப்புரம்


மயிலம்,

மயிலம், செண்டூர் சாலை ஜெயக்குமார் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் நடராஜன் (வயது 47). இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டுக்கு இன்னும் கிரகப்பிரவேசம் செய்யாததால், அருகில் ஒரு கொட்டகை அமைத்து, அதில் தங்கி வந்தார். மேலும் திண்டிவனத்தில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலைய நேற்று முன்தினம் இரவு, புதிய வீட்டில் தூங்கினர். காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டு முன்பு இருந்த கொட்டகையின் கதவு திறந்து விடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த ஒரு லட்சம் ரூபாய், லேப்டாப், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து நடராஜன் மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story