தேனி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீடுகளை ஒப்படைக்கக்கோரி பயனாளிகள் தர்ணா


தேனி கலெக்டர் அலுவலகத்தில்  இலவச வீடுகளை ஒப்படைக்கக்கோரி பயனாளிகள் தர்ணா
x

இலவச வீடுகளை ஒப்படைக்கக்கோரி பயனாளிகள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் இலவச வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் வனவேங்கைகள் கட்சி பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வீடுகளை ஒப்படைக்கும் வரை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறப் போவதாகவும் அறிவித்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வருகிற 17-ந்தேதிக்குள் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 17-ந்தேதிக்குள் வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்காவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story