தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது -ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில்  பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது -ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை


தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

புதிய அட்டை

அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் பணி, மதுரை அ.தி.மு.க. புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரும், மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அடையாள அட்டைகளை வழங்கும் பணியினை தலைமை தாங்கி வழங்கி வருகிறார். அதன்படி மதுரை மேற்கு (தெற்கு), அலங்காநல்லூர், வாடிப்பட்டி வடக்கு, வாடிப்பட்டி தெற்கு ஆகிய ஒன்றியங்களில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சுப்பிரமணியம், தனராஜன், திருப்பதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, மதுரை மேற்கு(தெற்கு) ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் கே.ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அசோக், முருகேசன், மணிமாறன், சரவணபாண்டி, மகேந்திரபாண்டி, ராஜேஷ்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

அடையாள அட்டைகளை வழங்கிய பின் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- கடந்த சட்டசபை தேர்தலின் போது 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. இதை அ.தி.மு.க. தவிர வேறு கட்சிகள் தட்டி கேட்பதில்லை. எனவே தி.மு.க. தலைக்கனத்துடன், மமதையுடன் இருந்து வருகிறது. இந்த அரசை எடப்பாடி பழனிசாமி, சிம்மசொப்பனமாக இருந்து எதிர்த்து போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தேனி, விருதுநகர், மதுரை, நெல்லை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் செல்லும் போது மக்கள் மிகப்பெரிய எழுச்சியான முறையில் வரவேற்பு அளித்தனர். இதை கண்டு தி.மு.க.வும், துரோகிகளும் அதிர்ந்து போய் உள்ளனர்.

கல்வித்துறை

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அநாகரிகமாக ஒரு நபர் நடந்து கொண்டார். ஆனால் அவர் மீது வழக்கு இல்லை. ஆனால் பொறுமை காத்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திருச்சியில் அமைச்சர் நேருவின் ஆதரவாளருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் ஆதரவாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் போலீஸ் நிலையத்தில் சண்டையிட்டு பெண் போலீசார் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் துறையை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

இதுவரை தமிழகத்தில் இல்லாத வகையில் பள்ளி கல்வித்துறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக தான் பிளஸ்-2 தேர்வில் ஹால் டிக்கெட் வழங்கியும், 50 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுதவில்லை என்பது இந்த ஆட்சியின் செயல்படாத தன்மையை காட்டுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திட்டங்களை எல்லாம் இப்போது கருணாநிதி காலத்தில் கொண்டு வந்தது என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசிடம் தங்க விருதை எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு பெற்று தந்தார். கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 1,321 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.664 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஒரு கோடி பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story