பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின டுவீட்


பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின டுவீட்
x
தினத்தந்தி 8 March 2023 4:20 AM GMT (Updated: 8 March 2023 4:24 AM GMT)

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் தினம் 2023 அமையட்டும்!

பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்!

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!" என்று கூறியுள்ளார்.


Next Story