போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்களால் பரபரப்பு


போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
x

புதிய பாலத்தை திறக்கக்கோரி போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்களால் பரபரப்பு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் ரெயில் நிலையம் அருகே இருவழி தடத்திற்காக பரம்பை பகுதியில் திங்கள் நகர்-அழகிய மண்டபம் தடத்தில் சாலை துண்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரணியல், ஆழ்வார் கோவில், வட்டம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இரயில் நிலையம், பரம்பை, ஆலங்கோடு, மைலோடு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொது மக்கள் சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் ெரயில் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறக்கக்கோரி அப்பகுதியில் உள்ள பொது மக்கள் தீடிரென நேற்று காலை ெரயில் நிலையம் அருகே சாலை மறியல் செய்ய திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு வந்து, போராட்டம் நடத்த திரண்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய மேம்பாலத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story