திக்.. திக்.. பயணம்!
திக்.. திக்.. பயணம்!
மதுரை
'படியில் பயணம், நொடியில் மரணம்' என்று பஸ்களில் எழுதப்பட்டு இருக்கும். ஆனால் இந்த வாசகத்தை பள்ளி மாணவர்கள் மதிக்காதவர்கள் அல்ல. பள்ளி நேரங்களில் குறைந்த டவுன்பஸ்களே இயக்கப்படுவதால் தினம், தினம் புத்தக பையுடன் டவுன்பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு தான் பயணிக்கின்றனர் மாணவர்கள். டவுன்பஸ்சில் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்களை பார்த்தால் மனது ஒரு நிமிடம் திக், திக் என்று இருக்கும். இதற்கு காரணம் பள்ளிக்கூட நேரங்களில் மிக குறைந்த அளவே டவுன்பஸ்கள் இயக்கப்படுவது தான். மதுரை புறநகர், மாநகரில் இது போன்ற காட்சிகளை தினம், தினம் பார்க்கலாம். ஏதேனும் விபரீதம் நிகழும் முன் பள்ளிக்கூட நேரங்களில் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் முன் வருவார்களா?
Related Tags :
Next Story