கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது


கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திருமாவளவன் கைது
x

கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்திய விசிகவினரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி, உரையாற்றியபோது, அறிக்கையில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தார். மேலும், முதல் அமைச்சர் உரையின் போது பாதியில் எழுந்து சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற போராட்டத்தில், கவர்னருக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

அப்போது பேசிய திருமாவளவன், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் கவர்னர் இல்லாமல் பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது என்று கூறிய அவர், கவர்னர் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இதையடுத்து போலீசார், தடையை மீறி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரையும், திருமாவளவனையும் கைது செய்தனர்.


Next Story