அம்மன் கோவிலில் பால்குட திருவிழா


அம்மன் கோவிலில் பால்குட திருவிழா
x

அம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில் உள்ள ஆதிசக்தி ராஜராஜேசுவரி கோவிலில் ஆண்டுதோறும் பால்குட திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கோவில் அறங்காவலர் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக பால்குடம், அக்னிச்சட்டி, காவடி, கரும்பாலை தொட்டி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை அடைந்தனர். பின்பு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் பூமிநாதன், பரமக்குடி அங்காள பரமேசுவரி கோவிலின் டிரஸ்டி ஜீவானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர். வக்கீல் திருமலை முருகன், சித்தர்கள் மகா சபை பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


Next Story