தீண்டாமை குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - கி.வீரமணி அறிக்கை


தீண்டாமை குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - கி.வீரமணி அறிக்கை
x

தீண்டாமை குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடிநீரில் மலங்கலந்த கொடுமை பற்றிய செய்தி வெளிவந்தது. அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பெருங்காடு கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு மாற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஆபாசமாகத் திட்டி, அவர்களின் உடைகளையும் வீசி எறிந்துள்ளனர். இதேபோன்று, அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு என்ற இடத்தில், டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த 2 பேர் வடை கேட்டபோது, டீ கடைக்காரர் கொடுக்க மறுத்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் நமது 'திராவிட மாடல்' அரசில் ஒரு துளிக்கூட நடக்க அனுமதிக்கக் கூடாது.

தீண்டாமை ஒழிப்பும், ஜாதி ஒழிப்பும் நமது கண்ணான கொள்கை ஆகும். எனவே, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story