கட்டுமான பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்


கட்டுமான பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்
x
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் 
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 1:41 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டுமான பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் - கலெக்டர் தகவல்

கடலூர்

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட குறைதீர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு(ஊரகம்) திட்டத்தில் வீடு கட்டி வரும் பயனாளிகள், சிமெண்டு, கம்பி போன்ற கட்டுமான பொருட்கள் மற்றும் பட்டியல் தொகை பெறுவதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஊரகப் பகுதி மக்கள், மாவட்ட குறைதீர் உதவி மையத்தை 1800-425-2172 மற்றும் 04142-294299 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story