ரூ.10 லட்சம் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல்


ரூ.10 லட்சம் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல்
x

ரூ.10 லட்சம் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி

சோமரசம்பேட்டை:

திருச்சி ராம்ஜிநகர் அருகே நவலூர்குட்டப்பட்டில் திறந்தவெளி திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்க மேலாளராக ஹரீஷ் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அடையாளம் தெரியாத 3 பேர், அந்த தியேட்டரில் புகுந்து, அனுமதியின்றி அந்த தியேட்டரை நடத்தி வருவதாக கூறி, அவரிடம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறி மிரட்டினர். அதற்கு மேலாளர் ஹரீஷ், அனுமதி பெற்றே திரையரங்கை நடத்தி வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி பணம் தருமாறு கேட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து மேலாளர் ஹரீஷ், ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்தவர்கள் முருகேசன், போஸ்கோ என்ற வாண்டையார், மகேந்திரன் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிந்து, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story